ரெட்டை ஜடையில் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ்.. நடிக்க வருவதற்கு முன் எடுத்த புகைப்படம்
நடிகை நயன்தாரா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா.
கடந்த ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, விரைவில் சினிமாவில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை நயன்தாரா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்டை ஜடையில் நயன்
இந்நிலையில், நடிகை நயன்தாரா தமிழில் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரெட்டை ஜடை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார் நயன்.
இதோ அந்த புகைப்படம்..