வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் வீடியோ
நயன்தாரா
நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது இவர் ராக்காயி என்னும் மிரட்டல் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.
அவ்வப்போது ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய குழந்தைகளையும் அழைத்து சென்று கவனமுடன் வளர்த்து வருகிறார்.
வைரலாகும் வீடியோ
ஒரு நடிகையாக மட்டுமின்றி இரண்டு குழந்தைகளின் தாயாக வலம் வரும் நயன்தாரா காதலர் தினத்தை முன்னிட்டு தன் கணவருடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் லவ் இன்சுரன்ஸ் கம்பனி படத்தில் இடம் பெற்ற பாடலான 'உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா' பாடலை இணைந்து பாடி வெளியிட்டுள்ளனர். அதன் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
