தன்னை விட 30 வயது அதிகம் உள்ள நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா.. யாருடைய படம் வீடியோவுடன் இதோ
நயன்தாரா
இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவை ராஜ்ஜியம் செய்தவர் அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி பக்கமும் சென்றார்.
அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நயன்தாராவிற்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் வந்ததாக கூறப்பட்டது, ஆனால் எந்த ஒரு பட அறிவுப்பும் இதுவரை வரவில்லை.
வீடியோ
கடைசியாக நயன்தாரா நடிப்பதாக மூக்குத்தி அம்மன் 2 பட தகவல் வந்தது, பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா புதிய பட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா தெலுங்கு சினிமா பக்கம் செல்கிறார். தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் தான் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் இப்படம் அவரது 157வது படமாம். புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ள சிரஞ்சீவிக்கும், நயன்தாராவிற்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது.