தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் பாடலை பார்த்து நயன்தாரா மகன்களின் ரியாக்ஷன்... கியூட் வீடியோ
நயன்தாரா
தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றும் போதும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இடையே காதல் ஏற்பட பல வருடத்திற்கு பிறகு திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு உயிர்-உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
வேலைக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில் இருவருமே தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.
கியூட் வீடியோ
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் மகன்களின் ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் உயிர், உலக் இருவரும் தங்களது தாய் நடித்த தங்கமே உன்னத்தான் பாடலை தொலைக்காட்சியில் பார்த்து குஷி ஆகின்றனர்.
அந்த கியூட் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
