ரூ. 4.50 கோடி கடன், தலைகீழாக மாறிய வாழ்க்கை- பிரச்சனையில் இருந்து மீண்டது எப்படி, ஓபனாக கூறிய சீரியல் நடிகை நீலிமா ராணி

Yathrika
in பிரபலங்கள்Report this article
நீலிமா ராணி
நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் நடித்து பிரபலம் அடைந்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நீலிமா ராணி நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16, 1947 எனும் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் அம்மாவாக நடித்திருப்பார்.
எதிர்க்கொண்ட துன்பம்
2008ம் ஆண்டு நீலிமா ராணி 10 வருட வயது வித்தியாசம் கொண்ட இசைவாணனை திருமணம் செய்திருக்கிறார்.
இருவரும் இணைந்து 2011ம் ஆண்டு ஒரு படம் ஒன்நை தயாரிக்க முடிவு செய்து நியூசிலாந்தில் 55 நாள் படப்பிடிப்பிற்கு இங்கிருந்து 55 பேரை அழைத்துக் கொண்டு சுமார் ரூ.4.50 கோடி செலவு செய்துள்ளனர்.
அதிக கடன் வாங்கி அவர்கள் வேலையை செய்ய சில நண்பர்கள் முதுகில் குத்தியதால் படத்தை அவர்களால் வெளியிட முடியாமல் போனதாம்.
இதனால் கையில் இருந்த பணம், வீடு எல்லாமே பறிபோய் இனிமேல் வீட்டிற்கு போனால் நன்றாக இருக்காது என இசைவாணனின் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர்.
பின் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து வாடகை இருந்த வீட்டை வாங்கியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ- யார் தெரிகிறதா?