சிறகடிக்க ஆசை சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை... யார் பாருங்க
சிறகடிக்க ஆசை
இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில், சீதாவின் வேலை கிடைக்க அவர் மீது போடப்பட்ட பண திருட்டு பழி போனது முத்துவால் தான் என்பதை அவர் உணர்கிறார்.
பின் தனது அக்கா மற்றும் மாமாவிடம் மன்னிப்பும் கேட்கிறார். இதுதான் இந்த வார எபிசோட் புரொமோவாக அமைந்தது.

இன்றைய எபிசோட்
இன்று ஒளிபரப்பாக போகும் எபிசோடில், ஸ்ருதி, ரவி ரெஸ்டாரன்ட் வந்து சாப்பாடு ஆர்டர் கேட்கிறார்.
7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே...
அதற்கு நீது உங்களது ரெஸ்டாரன்ட் என்ன ஆனது என கேட்க அதற்கு அவர், எனது ரெஸ்டாரன்ட் ஊழியர்களை அதிக பணம் கொடுத்து யாரோ அழைத்துவிட்டார்கள். நான் நில கல்லூரி மாணவர்களை Part Time வேலைக்கு எடுத்தேன் இப்போது செம கூட்டம்.

அவர்களுக்காக தான் ஆர்டர் செய்ய வந்தேன், அதோடு உனக்கும் நன்றி நீ இப்படி செய்யவில்லை என்றால் எனக்கு இந்த ஐடியா வந்திருக்காது என்கிறார்.
நீது பணம் கொடுத்து இந்த வேலை செய்ததை அறிந்த ரவி இது சுத்தமாக சரியில்லை, எனக்கு இது பிடிக்கவில்லை என கூற முதலில் உங்கள் வேலையை பாருங்கள் என கூறுகிறார்.

இன்னொரு பக்கம், சத்யா முத்து பேசியதை கேட்டு நான் இந்த வேலைக்கு வரவில்லை, மற்றவர்களை மிரட்டி பணம் வாங்குவது சரியில்லை என கூறுகிறார். அந்த இடத்தில் சத்யா ஓனரின் மகளாக ஒருவர் புதிய என்ட்ரி கொடுக்கிறார், அவர் சிந்தாமணியின் மகளாம்.
இதோ புதிய என்ட்ரி நடிகையின் போட்டோ,
