ஹீரோயினாக அறிமுகமாகும் லவ்வர் பட புகழ்பெற்ற நிகிலா.. இயக்குனர் யார் தெரியுமா?
நடிகை நிகிலா
குறும்படங்களில் நடித்து அதன்முலம் வெள்ளித்திரையில் நுழைந்து குட்நைட் மற்றும் லவ்வர் போன்ற ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நிகிலா ஷங்கர்.
இவர் தற்போது நாயகியாக டோபமைன் @ 2.22 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெப்பம். குளிர். மழை படத்தில் நாயகனாக நடித்த திரவ் இயக்குகிறார், குற்றம் கடிதல் புகழ் சத்யா நடித்துள்ளார்.
மேலும், விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான தலைப்பில் அமைந்த இந்த படத்தை வெறும் 18 முதல் 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னை மற்றும் அதனை சுற்றி அமைந்த அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளனர் என இந்த படத்தின் இயக்குனர் திரவ் கூறியுள்ளார்.
மேலும், வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி மையமாக இந்த படம் எடுக்கப்பட்டது எனவும் கூறினார்.

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
