கோவை சரளா போல் திருமணமே செய்யாமல் இருக்கும் பிரபல நடிகை நிர்மலா- ஏன் தெரியுமா?
ஆச்சி மனோரமாவிற்கு பிறகு பெண்களில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கோவை சரளா.
நடிகையின் பயணம்
1983ல் வந்த பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் சிறிய வேடத்தில் சினிமாவில் அறிமுகமானார். பிறகு பல காமெடி படங்கள் நடித்த வந்த அவருக்கு கரகாட்டக்காரன் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பின் படத்துக்கு படம் நடித்த அவர் 750 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார்.
எல்லோரையும் காமெடி மூலம் சிரிக்க வைத்து ரசித்துவந்த கோவை சரளா இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. தனது சகோதர சகோதரிகளின் குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார்.
வெண்ணிற ஆடை நிர்மலா
60, 70களில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர் நிர்மலா.
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அப்பட பெயரே அவரது பெயருக்கு முன் அமைந்துவிட்டது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார்.
திருமணம் குறித்து நிர்மலா
திருமணம் வேண்டாம் என நான் முடிவு செய்ததற்கு என்னுடைய அப்பா, அம்மா தான் காரணம். ஏன்னா, என் அம்மா அவ்வளவு அழகாக இருப்பார்கள். ஆனால், எங்க அவ்வளவு நான் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவங்க மேல சந்தேகப்படுவார்.
எனக்கும் இந்த மாதிரி ஒரு கணவர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அழகான பொருளை நடிகை சமந்தாவிற்கு பரிசளித்த நயன்தாரா- என்னது அது பாருங்க