கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை- குவியும் லைக்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் 5 வருடங்கள் படு ஹிட்டாக ஓடியது.
அண்ணன்-தம்பிகள் பாசம், கூட்டுக் குடும்பம் என இன்றைய காலத்தில் மக்கள் மறந்துள்ள விஷயங்களை தொடர் அழகாக காட்டி வந்தது.
ஆனால் தொடர் முடிந்துவிட்டது, இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரிலேயே இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் அப்பா-மகன்கள் பாசம் பற்றிய கதையாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த சிலர் பேர் மட்டுமே இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்கள். முதல் பாகம் அளவிற்கு இன்னும் 2ம் பாகம் ரீச் பெறவில்லை.
நடிகையின் போட்டோ
இந்த நிலையில் 2ம் பாகத்தில் அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை நிரோஷா. இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை, வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் கலக்கிய நடிகை.
இவர் அண்மையில் தனது கணவர் ராம்கியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சிக்கு பாதை இல்லை, மகிழ்ச்சியே பாதை என பதிவு செய்துள்ளார்.
அவரின் அந்த கியூட்டான புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
You May Like This Video