இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என தெரிகிறதா? தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை
நடிகையின் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், யார் இவர் என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இவர் மலையாளத்தில் நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கி பின், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என முன்னணி நடிகையாக மாறினார்.
நித்யா மேனன்
அவர் வேறு யாருமில்லை நடிகை நித்யா மேனன்தான். ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் நித்யா மேனனின் சிறு வயது புகைப்படம்தான் அது. நித்யா மேனன் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை படம் வெளிவரவுள்ளது.
நித்யா மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தலைவன் தலைவி படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக இட்லி கடை படம் வெளிவரவுள்ளது. ஏற்கனவே தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இட்லி கடை படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.