எங்கப்பா நடிகை ஓவியா ஆர்மி, ரெடியா- சூப்பராக வந்த தகவல்
குபு சிகு குபு சிகு பிக்பாஸ், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற வசனத்துடன் தமிழில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.
19 போட்டியாளர்கள் 98 நாட்கள் வெற்றிகரமாக நிகழ்ச்சி ஓடியது, இதில் இளம் நாயகன் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட மக்களிடம் அதிகம் பிரபலமானது ஓவியா தான், யாருக்கும் பயப்படுவது இல்லை, தைரியமாக பேசக்கூடிய ஒரு நபர்.
அவர் காதல், காமெடி, கோபம், விளையாட்டு, நட்பு என பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த எமோஷ்னலையும் காட்டிய நபராக இருந்தார். அவரைப் பிடித்துப்போய் தமிழக ரசிகர்கள் ஓவியா ஓவியா என காதல் பரத் போல் புலம்பி வந்தார்கள்.
ஆனால் இப்போது ஓவியா இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார், படங்கள் நடிக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் ஓவியா குறித்து ஓரு சூப்பர் தகவல், அது உண்மையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக உள்ளது.
அது என்னவென்றால் OTT தளத்தில் புதியதாக தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை கேட்டுள்ளார்களாம். 42 நாட்கள், 13 போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம்.
இதில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது, பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.