அந்த நிலை இல்லாததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை... நடிகை பார்வதி பேட்டி
நடிகை பார்வதி
மலையாள சினிமாவில் ப்ருத்விராஜ், நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் I Nobody.
இப்படம் வரும் ஜுலை 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பிஸியாக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

பேட்டி
அப்படி ஒரு பேட்டியில் நடிகை பார்வதி தாய்மை குறித்து பேசியுள்ளார்.
எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. ஒரு தரப்பினர் குழந்தையைப் பெற்று மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்.

பெண்களும் உடலளவில் பெரிய அளவில் மாற்றங்களை எத்ரிகொள்கின்றனர். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெரிய விஷயம், அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது.
அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை, அதனால்தான் அம்மாவாகாமல் இருப்பது தான் என்னுடைய தாய்மை என்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri