சிறந்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.. அம்மா சங்கத்தில் இருப்பவர்கள் கோழை.. ஆவேசமாக பேசிய நடிகை பார்வதி
மலையாள சினிமா
சினிமா துறையில் சமீபத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை தான். இதற்கு குரல் கொடுத்து பல நடிகர் மற்றும் நடிகைகள் பேசி வருகின்றனர்.
இந்த பிரச்சனை தற்போது மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மா கலைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சங்கத்தின் தலைவரான மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆவேசமாக பேசிய பார்வதி
தற்போது, ஒரு பேட்டியில் இதுகுறித்து நடிகை பார்வதி திருவோத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "சங்க பொறுப்பில் இதுவரை இருந்தவர்களும் அதற்கு தலைவராக இருந்தவரும் எவ்வளவு பெரிய கோழைகள் என்று தான் முதலில் நினைத்தேன்.
ஹேமா கமிட்டி முன் வைத்துள்ள குற்றச் சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தான் இவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அம்மா சங்கத்தில் இருக்கும் நபர்கள் பெண்களுக்கு எதிராக மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கூட பரவாயில்லை.
ஆனால் இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இவ்வாறு ராஜினாமா செய்வது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயம். அம்மா சங்கத்தில் நடிகைகள் தன் தேவைகளை பற்றி பேச கூட அங்கு உரிமை இருக்காது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் சிறந்த தலைமை வர வேண்டும் அப்போது தான் இந்த நிலை மாறும் என்று பதிலளித்தார்.