அந்த தமிழ் படத்தில் நிராகரிக்கப்பட்டேன் ஆனால்.. மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வருகிறார். தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மனம் திறந்த நடிகை
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தமிழ் படம் ஒன்றுக்கு ஆடிஷன் சென்றது குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "சமீபத்தில் நான் ஒரு தமிழ் படத்திற்கு ஆடிஷன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது நிராகரிக்கப்பட்டேன். நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் இளமையாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள், அதனால் வயதில் மூத்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இதற்காக நான் வெட்கப்படவில்லை, எப்போதும் ஆடிஷன்களுக்கு செல்ல தயாராக உள்ளேன். ஈகோ உங்கள் திறமையில் தலையிட அனுமதிக்காதீர்கள். பலருக்கு ஆடிஷனுக்கு செல்லும் பாக்கியம் கிடைப்பதில்லை.
எனவே வாய்ப்பு கிடைக்கும்போது, அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றும் சில பெரிய நட்சத்திரங்கள் ஆடிஷன் சென்று கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
