சூர்யா 44 படத்தின் கதை இதுவா.. போட்டுடைத்த நாயகி பூஜா ஹெக்டே
சூர்யா 44
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா அவரது 44 - வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்ட நிலையில் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.
பூஜா ஹெக்டே பதில்
இந்நிலையில், சூர்யாவின் 44 - வது படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டேவிடம் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் மறைமுகமாக அவர் பதிலளித்துள்ளார்.
அதில், "கார்த்திக் சுப்புராஜ், லவ் ஸ்டோரி எழுதினால் எப்படி இருக்குமோ அது போன்று தான் சூர்யா 44 படத்தின் கதை அமைந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும்" என்று கூறியுள்ளார்.
தற்போது இவர் தளபதி 69 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
