நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. இதோ பாருங்க
ப்ரீத்தி முகுந்தன்
முட்டு Mu2, ஆச கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இதன்பின், கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த பிளாஸ்ட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். பிளாஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான இதயம் முரளி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அழகின் ரகசியம்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் கேள்வியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை ப்ரீத்தி வெளிப்படையாக கூறியுள்ளார். "நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்; எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்" என கூறியுள்ளார்.