வயிற்றில் குழந்தையுடன் நடிகை மனோரமா பட்ட வேதனை.. பலரும் அறியாத கண்ணீர் கதை!
மனோரமா
1950களில் இருந்து சினிமாவில் பயணிக்க துவங்கியவர் நடிகை மனோரமா. இவரை ஆச்சி என செல்லமாகவும் அழைப்பார்கள். இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக விலங்கினார்.
தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார். நகைச்சுவையில் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்களாலும் நடிக்க முடியும் என காட்டிய இவர், தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளையும் வென்றார்.
தற்போது, மனோரமா குறித்து சில விஷயங்களை பார்ப்போம். நாடக குழுவில் நடித்துக்கொண்டிருந்த நடிகை மனோரமா, அக்குழுவில் இருந்த எஸ்.எம். ராமநாதன் என்பவரை காதலித்து 1964ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கண்ணீர் கதை!
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின் இவரது கணவர் நாடகத்தில் நடிக்கும்படி அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். கணவரின் வற்புறுத்தலால் வேறு வழியே இல்லாமல் தொடர்ந்து நாடகங்களில் நடித்து இருந்தவர்.
ஒரு கட்டத்தில் கணவர் செய்வதை தாங்க முடியாமல் அந்த உறவில் இருந்து விலகி வந்து சினிமாவில் முழு கவனம் செலுத்தினார். கடந்த 2015ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.