தனது காதலனுடன் அழகிய போட்டோ வெளியிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர்- எங்கே சென்றார் பாருங்க
பிரியா பவானி ஷங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்க துவங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்கிற திரைப்படம் மூலம் நாயகியாக சினிமாவில் களமிறங்கிய அவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, பொம்மை என நிறைய படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
பிரியா பவானி ஷங்கர், ராஜ்வேல் என்பவரை காதலிப்பது நாம் அனைவருக்கு தெரிந்த விஷயம் தான்.
தீபாவளி ஸ்பெஷலாக காதலனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியா இப்போது தனது தோழியின் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.