40 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை பிரியாமணி சீக்ரெட் என்ன?
நடிகை பிரியாமணி
தமிழ் சினிமாவில் 2004ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பிரியாமணி. அதன்பிறகு பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருதை வென்றிருந்தார்.
மேலும் மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே 2017ம் ஆண்டு முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார்.
பிட்னஸ் சீக்ரெட்
ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பாராம், இதனால் அவர் புத்துணர்ச்சியாக இருக்க உதவுமாம். வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கும் பிரியாமணி கார்டொயோ வொர்க்கவுட் அதிகம் செய்வாராம்.
தினமும் யோகா மற்றும் வாக்கிங் தவறாமல் செய்வாராம். வாரம் ஒருமுறை முகம் முதல் கால் வரை தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து ஸ்பா குளியல் போடுவாராம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
