இப்போது இருக்கும் ஹீரோயின்கள் அந்த மாதிரி பன்றாங்க.. நடிகை பிரியாமணி ஓபன் டாக்

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
பிரியாமணி
கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை பிரியாமணி. தற்போது இவர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர், " முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள. மேலும் திருமணம் முடிந்துவிட்டால் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை என்ற எண்ணம் தான் நிலவி வந்தது".
"அதுமட்டுமின்றி திருமணமான நடிகைகள் படத்தில் அண்ணி, அம்மா ரோலில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது அந்த மாதிரி இல்ல. திருமணமான நடிகைகள் பிஸியாக நடித்து வருகின்றனர்".
"என்னுடைய கணவரால் தான் எப்போது நடிக்க முடிகிறது. என்னுடைய கணவர் நான் சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை" என்று பிரியாமணி கூறியுள்ளார்.