இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை பிரியங்கா சோப்ரா சொத்து மதிப்பு
பிரியங்கா சோப்ரா
உலக அழகியாக பட்டம் பெற்று அப்படியே பாலிவுட் பக்கம் வந்து ராஜ்ஜியம் செய்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
தமிழில் இவர் விஜய்யுடன் தமிழன் என்ற ஒரே படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் அதிக படங்கள் நடித்தாலும், நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் பிரியங்கா சோப்ரா மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டார்.
ஆனால் அவர் தனது திறமையை நிரூபிக்க நிறைய இடங்கள் இருப்பதை புரிந்துகொண்டு அப்படியே ஹாலிவுட் பக்கம் சென்றவர் தொடர்ந்து அங்கு படங்கள் நடித்து வருகிறார்.

அப்படி இல்லை என்று விடிய விடிய அடிச்சு என்னை சித்ரவதை செய்தான்- பிக்பாஸ் காஜல் பசுபதி பரபரப்பு தகவல்
அண்மையில் அம்பானி மகன் ஆனந்த் திருமணத்திற்காக தனது கணவருடன் இந்தியா வந்திருந்தார்.
சொத்து மதிப்பு
படங்கள், விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள், சொந்த தொழில் என பல வகையில் சம்பாதிக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ. 669 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மில்லியன் கணக்கான டாலர்களில் சம்பளம் பெறும் இவர் ஒரு பிராண்டுக்கு ஒப்புதல் அளிக்க அல்லது விளம்பரப்படுத்த குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் பெருகின்றாராம்.
வணிகங்கள் முக்கிய பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதை தவிர பிரியங்கா தனது சொந்த ஹேர்கேர் நிறுவனத்தை அனோமலி என்ற பெயரில் நடத்தி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நியூயார்க் நகரில் சோனா என்ற இந்திய உணவகத்தில் ஒரு பார்ட்னராகவும் உள்ளார்.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
