சீதா ராமன் சீரியலில் இருந்து வெளியேறிய பிரியங்கா நல்காரியின் புதிய தொடர்- பூஜை புகைப்படத்துடன் இதோ
சீதா ராமன்
சன், விஜய் டிவி சீரியல்கள் தான் இப்போது TRP டாப்பில் ஒளிபரப்பாகி வருகிறது, அந்த தொலைக்காட்சி தொடர்களுக்கு பிறகு ஜீ தமிழ் சீரியல்கள் வரும்.
ஜீ தமிழிலும் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே வருகின்றன, அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்டு படு ஹிட்டாக ஓடிய தொடர் தான் சீதா ராமன்.
இந்த தொடரில் சன் டிவி ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் இடையில் இனி நடிக்க வரமாட்டேன் என்று இந்த தொடரில் இருந்து விலகியிருந்தார்.
புதிய தொடர்
யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நடிகை பிரியங்கா நல்காரி மீண்டும் நடிக்க வந்துள்ளதை அறிவித்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரான நல தமயந்தி என்ற தொடரில் தான் பிரியங்கா நடிக்க இருக்கிறார், தொடர் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.