திருமணமான சில மாதத்தில் கணவரை பிரிந்த சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி- திடீரென எடுத்த அதிரடி முடிவு
பிரியங்கா நல்காரி
சின்னத்திரையில் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பக்கம் வருவது வழக்கமான விஷயம் தான்.
அப்படி தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமாகி பின் தமிழ் பக்கம் வந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகியாக நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.
அந்த தொடர் முடிவடைய அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் சீதா ராமன் தொடரில் நடித்து வந்தார், ஆனால் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
சில இடைவேளைக்கு பிறகு இப்போது நள தமயந்தி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அதிரடி முடிவு
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் தனது நீண்டநாள் காதலரை திடீரென திருமணம் செய்து புகைப்படங்களை வெளியிட்டார்.
ரசிகர்களும் அவருக்கு மனதார வாழ்த்து கூறினார்கள், கணவருடன் இணைந்து நிறைய புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
ஆனால் திடீரென கணவருடன் பதிவிட்ட புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாவில் இருந்து எடுத்துவிட்டார், அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.
இந்த நிலையில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலக இருப்பதாக அதிரடி பதிவை போட்டுள்ளார்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu