ஜிம் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ராய் லட்சுமி.. ஷாக்கான ரசிகர்கள்
ராய் லட்சுமி
ராய் லட்சுமி, கன்னடத்தை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டு காஞ்சனமா கேபிள் டிவி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அதன்பின் நீக்கு நாகு, ஆதிநாயக்குடு போன்ற படங்களில் நடித்தவர் தமிழ் பக்கமும் வந்து சில வெற்றிப் படங்களில் நடித்தார்.
பின் நாயகியாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிரபல நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் நடனம் ஆடி வந்தார்.
லேட்டஸ்ட்
படங்களில் ஆக்டீவாக இருந்ததை தாண்டி இன்ஸ்டாவில் தான் ராய் லட்சுமி ஆக்டீவாக இருந்தார் என்றே கூறலாம். எப்போதும் ஏதாவது ஒரு புகைப்படம் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
சமீபத்தில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
ஜிம் உடையில் அவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு காபி போல தனது உடல் இருக்க வேண்டும், அதே சுவையுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று ராய் லட்சுமி பதிவிட்டுள்ளார்.