மகளுக்கு கிலோ கணக்கில் நகைகள் போட்டு திருமணம் செய்துவைத்த நடிகை ராதாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?
கார்த்திகா நாயர்
நடிகை ராதா பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராதாவிற்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துவந்த ராதா பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்தில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.
இன்று வரை அப்படத்தில் ராதா நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் மாஸ்டர் பீஸாக நிலைத்துள்ளது.
திருமணம்
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துவந்த ராதா ராஜசேகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
நடிகை ராதா தனது மூத்த மகள் கார்த்திகாவின் திருமணத்தை படு கோலாகலமாக அண்மையில் நடத்தி முடிந்தார்.
சொத்து மதிப்பு திருமண புகைப்படங்களை ராதா தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டு புடவை, கை, கழுத்து என நிறைய தங்க ஆபரணங்களை கிலோ கணக்கில் அணிந்திருந்தார்.
அதேபோல் ராதா மற்றும் அவரது இளைய மகளும் தங்க ஆபரணங்களுக்கு எந்த குறைச்சலும் இல்லாமல் அணிந்திருந்தார்கள். நடிப்பில் ஒருபக்கம் சம்பாதித்த ராதா, இன்னொரு பக்கம் அவரது கணவர் ஹோட்டல் தொழில் என சம்பாதித்த இவர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
