தனது 63வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்
ராதிகா சரத்குமார்
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராதிகா.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை பாரதிராஜா பார்க்க கிழக்கே போகும் ரயில் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
முதல் படமே செம ஹிட் அடிக்க அதன்பின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
டாப் நாயகியாக வந்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஜீன்ஸ், சூர்யவம்சம், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் கலக்கியவர் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட ஹிட் சீரியல்களில் நடித்து அசத்தினார்.
சொத்து மதிப்பு
இன்று நடிகை ராதிகா தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது.
அவருக்கு மொத்தம் ரூ. 120 கோடி சொத்து உள்ளதாம், சென்னையில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. தயாரிப்பாளராகவும் இருக்கும் ராதிகா ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறாராம்.