கோடி மதிப்புள்ள புதிய காரை வாங்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்- எத்தனை கோடி தெரியுமா?
ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் படங்கள் நடித்து அந்த பிரபலம் மூலம் அப்படியே பாலிவுட் பக்கம் சென்று இப்போது பிஸியாக இருந்த வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
சமீபகாலமாக இவர் படங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகிறதோ இல்லையோ காதல் பற்றி செய்திகள் தான் அதிகம் வருகின்றன. அண்மையில் ஒரு விருது விழாவிற்கு புடவையை கிளாமராக அணிந்து சென்றிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் புதிய வீட்டிற்கும் நடிகர் சிம்புவுக்கு உள்ள கனெக்ஷன்- என்ன தெரியுமா?
அந்த புடவை இரண்டரை லட்சம் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
புதிய கார்
இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் Mercedes Benz Maybach GLS ஆரம்பர சொகுசு காரை வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைர்லாகி வருகின்றன.
ரகுல் வாங்கிய புதிய மெர்சிடஸ் காரின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடியாகும்.