தனது வாழ்க்கையில் நிறைவேறாமல் போன ஆசை குறித்து நடிகை ரம்பா வருத்தம்.. என்ன தெரியுமா?
நடிகை ரம்பா
அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா என்ற பாடலை கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள்.
அந்த அளவிற்கு பாட்டும், பாடலில் ஆடிய ரம்பா நடனமும் மாஸாக இருக்கும். 90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் நாயகியாக வலம் வந்தவர் கடந்த 2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
நடிகையின் ஆசை
2 மகள்கள், 1 மகன் உள்ள நிலையில் அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சினிமாவில் இருந்து விலகியிருந்தேன் என்றார்.
மேலும் தனக்கு 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்றும் 3 பிள்ளைகளுமே சிசேரியன் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.