ஏன் சல்மான் கான் தான் கட்டிப்பிடிப்பீங்களா, ரம்பாவிடம் வம்பு இழுத்த ரஜினி- Rambha Exclusive Interview
நடிகை ரம்பா
90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.
தனது 15 வயதில் 1992ம் ஆண்டு மலையாளத்தில் இவர் சர்கம் என்ற படத்தில் வினீத்துடன் ஜோடி சேர்ந்து தனது முதல் படம் நடித்தார். பின் அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார்.
1993ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார்.
தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அடுத்தடுத்து தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அழகிய லைலா பாதலில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு அவர் போட்ட ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்றே கூறலாம். இப்போது திருமணம் ஆகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் இவருக்கு உள்ளார்.
நடிகையின் பேட்டி
இந்நிலையில் நடிகை ரம்பா சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக கொடுத்த சிறப்பு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததை பற்றி சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். அப்போது ரம்பா சல்மான் கானுடனும் நடித்து வந்தாராம், சல்மான் ஒரு நாள் செட்-க்கு வந்த போது ரம்பா கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார்.
இதை பார்த்த ரஜினி ரம்பாவை வம்பு இழுக்க வேண்டும் என்று கோபமாக, என்ன ஹிந்தி ஹீரோ என்றால் கட்டிப்பிடித்து வரவேற்ப்பீர்கள், ஆனால், தென்னிந்திய நடிகர்கள் என்றால் சும்மாவா, குட் மார்னிங் மட்டும் சொல்லிட்டு ஓரமா போய் உட்கார்ந்து விடுகிறீர்கள் என கோபமாக இருப்பது போல் ரஜினி நடித்து ரம்பாவை வம்பிழுத்தாராம், முழு பேட்டியை பார்க்க..