பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்- தற்போதைய நிலை
நடிகை ரம்பா
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ரம்பா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர்.
பின் மார்க்கெட் குறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற தொடங்கினார்.
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பல சீசன்கள் இருந்துள்ளார். பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து லண்டனில் செட்டி ஆனார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.
விபத்தில் சிக்கிய நடிகை
நேற்று நடிகை ரம்பா தனது மகள்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது மகள் ஷாசா மட்டும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
இந்த தகவலை நடிகை ரம்பாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?