முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா?
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருந்து வந்தவர் நடிகை ரம்பா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஸ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார். 1992ம் ஆண்டு சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் 15 வயதில் அறிமுகமானவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது.

ஆல்யா மானசாவின் இனியா சீரியல் படப்பிடிப்பில் திடீரென வந்த பாம்பு- பதற்றத்தில் நடிகர்கள், வீடியோவுடன் இதோ
அடுத்து தெலுங்கு பக்கம் சென்றவர், தமிழ் பக்கமும் வந்து உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, சுந்தர புருஷன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, விஜபி, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த ரம்பா ஒருகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பின் ரவீந்தர் என்பவரை ரம்யா திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
கஷ்டத்தில் நடிகை
சினிமா துறையில் நுழைந்தவர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனால் நிறைய நஷ்டத்தை அனுபவித்து சினிமாவே வேண்டாம் என்று சென்றவர்கள் பலர் உள்ளார்.
அப்படி நடிகை ரம்பாவும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். இவர் 3 ரோசஸ் படத்தை தயாரித்து நடித்தும் இருந்தார் ரம்பா, இந்த படத்தில் ஜோதிகா மற்றும் லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்தார்கள்.
படம் சரியாக ஓடவில்லை, இதனால் நஷ்டத்தை சந்தித்த நடிகை ரம்பா கடனை அடைக்க சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டை விற்றிருக்கிறார். அதன்பிறகு ரம்யா இந்த தயாரிப்பு பக்கமே தலைகாட்டவில்லை.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
