கோலாகலமாக நடந்த நடிகை ரம்பா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ
நடிகை ரம்பா
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. விசயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரைப்படங்களுக்காக முதலில் அம்ரிதா எனவும் பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக் கொண்டார்.
ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். ரம்பா நடித்த குயின் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலத்திலும் வெளியாக புகழ் பெற்றார்.
தற்போது ரம்பா கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகனின் பிறந்தநாள்
ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை ரம்பாவிற்கு இரண்டு மகள்கள் மட்டும் ஒரு மகன் இருக்கிறார். அண்மையில் தனது மகனின் 4வது பிறந்தநாளை கோலாகலமாக பார்ட்டி வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வீடியோக்களை அவரே வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உயிரிழப்பு- சோகத்தில் குடும்பம்