இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரம்யா கிருஷ்ணன்
30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன்.
இப்போதும் மிகவும் ஆக்டீவாக படங்கள் நடிக்கும் இவர் சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
சினிமா முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த இவர் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற ஒரு மகன் உள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா என்ற படம் வெளியாகி இருந்தது, இதில் நீலாம்பரியாக நடித்து அசத்தியிருந்தார்.

சொத்து மதிப்பு
ஒரு படத்துக்கு ரூ. 3 முதல் ரூ 4 கோடி வரை வாங்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு ரூ. 10 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. மொத்தமாக கணக்கு பார்க்கையில் நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் ரூ. 98 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri