என் திருமணம் குறித்து தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள், நான் அப்படி இல்லை.. நடிகை ரம்யா பாண்டியன் புலம்பல்
ரம்யா பாண்டியன்
வடிவேலு ஒரு படத்தில் ஒரே இரவில் ஒபாமா ரேஞ்சிற்கு பேமஸ் ஆகப்போகிறேன் என கூறியிருப்பார்.
அந்த வசனத்திற்கு ஏற்றார் போல் ஒரே ஒரு போட்டோ ஷுட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு கடந்த ஆண்டு (2024) ரிஷிகேஷில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது.
அவரது திருமணம் நடந்ததில் இருந்து ஒரு விஷயம் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகை விளக்கம்
அதாவது நடிகை ரம்யா பாண்டியன், தனது கணவர் லவலிடம் இருந்து வரதட்சணை பெற்று திருமணம் செய்துகொண்டார் என நிறைய செய்திகள் பரவுகிறது. இதுகுறித்து தற்போது ரம்யா பாண்டியன் தெளிவான விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நான் பள்ளி காலத்தில் இருந்தே எனது செலவுகளை நான் பார்த்துக்கொண்டு வருகிறேன். காலேஜ் முடிந்த பிறகும் வேலை செய்து சம்பாதித்து வந்தேன், சினிமாவிற்கு வந்து நடுவில் தான் கொஞ்சம் நான் எதுவும் செய்யவில்லை.
ஆனால் இப்போது வரை நான் எனது செலவையும், வீட்டையும் பார்த்துக்கொண்டு வருகிறேன்.
எனது திருமணம் கூட நான் பாதி பாதி செலவு ஏற்றுக்கொண்டு தான் செய்துகொண்டேன்.
இதில் வரதட்சணை என சொல்வது தான் கஷ்டமாக உள்ளது. தங்களது வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைக்கும் போது அவர்களுக்க ஆடை, நகைகள் கொடுத்து அழைப்பார்களாம்.
அவர்களின் பழக்கத்தை மதித்து தான் நான் வாங்கினேன், இதனை வரதட்சணை என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் என கூறியுள்ளார்.