காதலரை கட்டிப்பிடித்து முதன்முறையாக ரொமான்டிக் வீடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்... கல்யாண கலை வந்திடுச்சே..
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
முதல் படமே தோல்வியில் முடிய அடுத்து அவர் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் தான் ஜோக்கர்.
இப்படம் வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து நல்ல படங்கள் கொடுப்பார் என்று பார்த்தால் அதன்பிறகும் சரியாக வெற்றியை ரம்யா பாண்டியன் காணவில்லை.
இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டு மொட்டை மாடியில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.
அதன்பின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் என கலந்துகொண்டவர் படங்களிலும் பிஸியானார்.
திருமணம்
நடிகை ரம்யா பாண்டியனுக்கும் லோவல் தவான் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தனது வருங்கால கணவருடன் எடுத்த ஒரு ரொமான்டிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
