சிவகார்த்திகேயனுக்காக இதை நான் சொன்னேன்.. ரம்யா கிருஷ்ணன் கூறிய அதிரடி தகவல்
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் களமிறங்கி கடின உழைப்பாலும், நம்பிக்கையாலும் இன்று வெள்ளித்திரையில் புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அமரன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
அதிரடி தகவல்
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், " ஜோடி நிகழ்ச்சியின் போது சிவகார்த்திகேயனுக்கு நான் அதிகமான டாஸ்க்கை கொடுத்துள்ளேன்.
அதற்கு முக்கிய காரணம் அவர் மிகவும் திறமையானவர். அவர் மட்டும் ஹீரோவாகவில்லை என்றால் நான் எனது பெயரை மாற்றி கொள்கிறேன் என்று கூறினேன். இன்று அவர் திறமையால் பெரிய இடத்திற்கு சென்றுள்ளார்" என கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
