முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. அவரே கொடுத்த மாஸ் அப்டேட்
ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமாகி, பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் சல்மான் கானுடன் இணைந்து சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், தற்போது ராஷ்மிகா 'தாமா' என்ற ஹாரர் கதைக்களத்தில் முதல் முறையாக நடிக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் துவங்கி இருப்பதாக ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
