National Crush ராஷ்மிகா மந்தனா இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரியா?- முழு விவரம்
ராஷ்மிகா மந்தனா
National Crushஆக ஒட்டுமொத்த இந்திய மக்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் பிரபலமானாலும் நேஷ்னல் கிரஷ் ஆனது தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தான்.
அப்படத்திற்கு பிறகு ராஷ்மிகாவின் மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. அண்மையில் ஹிந்தியில் நடிகை ரன்பீர் கபூருடன், ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடித்த அனிமல் திரைப்படம் மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.
ஆரம்பம்
1996ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்த இவர் சைக்காலஜி ஜர்னலிஸம் படிப்பில் பட்டம் பெற்றவர். மாடலிங்கில் இருந்த ஆர்வம் அவரை 2016ம் ஆண்டு ரக்ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகப்படுத்தியது.
படங்கள்
2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.
மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவ்வரு, அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2, கார்த்தி உடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.
அமிதாப் பச்சனின் குட்பை படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
வீடு, கார்கள்
பெங்களூருவில் சுமார் ரூ. 8 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவுக்கு சொந்தக்காரரான ராஷ்மிகா மந்தனா அண்மையில் மும்பையில் ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ஃபிளாட் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ளார்.
தற்போது அவரிடம் அவரிடம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ்-சி மற்றும் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3 கார்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். சாதாரண டொயோட்டா கார் ஒன்றையும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி பயன்படுத்தி வருகிறாராம்.
சொத்து மதிப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துவரும் ராஷ்மிகா ரூ. 4 கோடியில் இருந்து ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
விளம்பரங்கள் மூலமாகவும் பலகோடி சம்பாதிக்கும் நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ. 65 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
