எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ருக்மிணி வசந்த், சாய் பல்லவி இல்லை!! கமிட்டான ராஷ்மிகா மந்தனா
எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி
1916-ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இதில் இவர் நடிப்பில் வெளிவந்த மீரா என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான ஒன்று.

புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் இசைக்கலைஞர் இவரே. மேலும், 1954-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை பெற்றார். இதுமட்டுமின்றி மியூசிக் அகாடமி வழக்கு சங்கீத கலாநிதி பட்டத்தை 1968-ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் மாபெரும் உச்சத்தில் இருந்த எம்.எஸ் அவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.
வாழ்க்கை வரலாறு
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சாய் பல்லவி, ருக்மிணி வசந்த்
இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ருக்மிணி வசந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் தற்போது இப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவை இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இறுதியாக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் புதிய உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.