இளைஞர்களின் கனவு கன்னி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் மூலம் அறிமுகமாகி, பின் தெலுங்கில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாலிவுட் திரையுலகிலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதில் புஷ்பா 2 படம் உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சல்மான் கானுடன் இவர்இணைந்து நடித்து வெளிவந்த சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா பிறந்தநாள்
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று 29வது பிறந்தநாள். இதை கொண்டாட தான் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ராஷ்மிகாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.