கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. ஆனாலும் தனது தங்கை விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த முடிவு
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான குபேரா, தாமா ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வெற்றியடைந்துள்ளன.

திரையுலக நட்சத்திரங்கள் தரும் பேட்டி அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஷிமன் மந்தனா குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
ராஷ்மிகாவின் தங்கை
அவர் கூறியதாவது: "எனக்கு 10 வயதில் ஒரு தங்கை இருக்கிறாள், எனக்கும் அவளுக்கு 16-17 வயது வித்தியாசம் உள்ளது. எனக்கு என் தங்கை என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், என் தங்கைக்கு எந்த வசதிகளையும் எளிதாக தரக்கூடாது என நினைக்கிறேன்.

ஏனென்றால் என் பெற்றோர் என்னை மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்கள். அப்படி கஷ்டப்பட்டு வளர்த்ததால்தான் இன்று இந்த நிலைக்கு என்னால் வளர முடிந்தது. அவளுக்கு இப்போது எல்லாமே எளிதாக கிடைப்பது போல் உள்ளது. ஆனால், அவளுக்கு அடிப்படை வசதிகளை தவிர வேறு எதுவும் கிடைக்கக்கூடாது. அவளும் பெரிய சாதனை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.