கடும் எதிர்ப்பால் ராஷ்மிகாவின் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கம்.. திடீர் முடிவால் பரபரப்பு
ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 உலகளவில் ரூ. 1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது, ராஷ்மிகா 'சாவா' என்ற படத்தில் நடித்துள்ளார். சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 14 - ம் தேதி வெளியாக உள்ளது.
இதில், ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
திடீர் முடிவு
அதில், மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான 'லெசிம்' உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

சூழல் இப்படி இருக்க படத்தின் இயக்குநர் லக்ஷ்மன் உடேகர், "லெஜிம் நடனத்தை விட இந்த படம் முக்கியமானது. அதனால் இந்த காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம்" என்று கூறியுள்ளார்.
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan