'அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா' பாடலில் நடித்த நடிகையா இது.. ஆளே மாறிவிட்டாரே!
கௌரி முன்ஜால்
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் Bunny. இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கௌரி முன்ஜால்.
அடுத்து கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தவர் பி.வாசு இயக்கத்தில் அவரது மகன் சக்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'தொட்டால் பூ மலரும்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் இடம் பெற்ற 'அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா’ என்ற பாடல் மூலம் செம்ம பிரபலமானார்.
அதன் பின், ‘சிங்க்குட்டி' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
ஆளே மாறிவிட்டாரே!
இந்நிலையில், தற்போது கௌரி முன்ஜாலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஆளே மாறியிருக்கும் போட்டோஸ் இதோ,