17 வயதில் கல்யாணம், கஷ்டம், விவாகரத்து- சோகமான விஷயங்களை கூறிய நடிகை ரேகா நாயர்
ரேகா நாயர்
இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பியவர் தான் ரேகா நாயர். பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இரவின் நிழல் படத்தில் பரபரப்பான காட்சியில் நடிக்க அடுத்து பிரபல பத்திரிக்கையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது ரேகா நாயர் என்றாலே தைரியமாக பேசக்கூடிய நடிகை என்ற பெயர் வந்துவிட்டது.
வாழ்க்கை
17 வயதில் எனக்கு திருமணம் நடந்தது, ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாண் இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன்.
18 வயதிலேயே எனக்கு குழந்தை பிறந்தாச்சு, என் மகள் பிறக்கும்போதே என்னுடைய கணவர் என்னுடன் இல்லை.
குழந்தை பிறந்த விஷயத்தை கேரளாவில் உள்ள என் பெற்றோருக்கு லெட்டர் மூலம் தெரிவித்தேன், பின் அவர்கள் வந்து அழைத்து சென்றார்கள்.
இப்போது எனக்கு 37 வயது ஆகிறது, இந்த 20 வருடத்தில் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நான் பார்க்கிறேன்.
வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்துள்ளேன், முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை என தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
30 கிலோ வரை உடல் எடையை குறைத்தது எப்படி?- ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா