சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள்
சிங்கப்பெண்ணே
விறுவிறுப்பான கதைக்களத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் சிங்கப்பெண்ணே. இந்த சீரியலில் மனீஷா மகேஷ், அமல்ஜித், தர்ஷக் கௌடா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு சிங்கப்பெண்ணே சீரியல் தொடங்கப்பட்டது. இதுவரை 853+ எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றப்பட்ட நடிகை
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்புவின் தங்கையாக யாழினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். ஆகையால் இவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் யாழினி கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார்.

திவ்யா இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் 'மிஸ் யூ திவ்யா, யாழினி கதாபாத்திரத்தில் உங்களை மிஸ் செய்வோம்' என சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan