திருமணம், விவாகரத்து பற்றி முதன்முறையாக பேசி வருத்தப்பட்ட நடிகை ரேவதி- என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒருகாலகட்டத்தில் வலம் வந்தவர் நடிகை ரேவதி.
ஹோம்லி லுக்கோ, மாடர்ன் உடையோ எல்லாவற்றிற்கும் இவரது லுக் செமயாக இருக்கும். மலையாளத்தில் நடித்துவந்த அவர் மண்வாசனை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
பிறகு ஏகப்பட்ட படங்கள் நடித்துவந்த அவர் சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இவர்கள் கடந்த 2002ல் இருந்தே குழந்தை இல்லாத பிரச்சனையால் பிரிந்தே தான் வாழ்ந்தார்களாம்.
இந்த நேரத்தில் தான் நடிகை ரேவதி தனது திருமண வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், நான் 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். 20 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அப்படி அவசரப்பட்டு செய்திருக்கக்கூடாது என்று பின்னால் தான் வருத்தப்பட்டேன்.
‘புன்னகை மன்னன்’ வந்த நேரம் அது. இன்னும் சில நல்ல படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாம் என்று அதற்கு பின்னர் தான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

கேம் விளையாட முடியாததால் சிறுவன் செய்த செயல் - 100க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து தேடிய போலீசார் IBC Tamilnadu
