முதல் திருமண நாள், சூப்பராக கொண்டாடியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா- அழகிய போட்டோஸ்
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக இருந்து வந்தது பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
தொழில் பிரச்சனை, இப்போது பழனிச்சாமியால் ஒரு ஆர்டர் கிடைக்கிறது. செழியன் பிரச்சனை சமீபத்தில் வெடித்தது, ஆனால் அதற்கான தீர்வு இன்னும் தெரியவில்லை. அடுத்து எழில்-அமிர்தா-கணேஷ் 3 பேரின் விவகாரம் எப்போது வெடிக்கும் என்பது தெரியவில்லை. இந்த வார இறுதியில் அவர்களின் விவகாரம் குறித்த கதைக்களம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகையின் பதிவு
இந்த தொடரில் அமிர்தா வேடத்தில் நடிகை ரித்திகா முதலில் நடித்திருந்தார், ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்.
தற்போது ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவருடன் முதல் திருமண நாளை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கோவில் சென்றபோது தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.