தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா.. வீடியோவுடன் இதோ
நடிகை ரித்திகா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா.
பின் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என அடுத்தடுத்து தொடர்கள் நடித்தாலும் பெரிய அளவில் ரீச் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான். இதில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றுவிட்டார்.
சீரியல்களில் கலக்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார், பின் KPY பாலாவுடன் இணைந்து நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார்.
குழந்தை
இதனிடையில் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வினு என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்த ரித்திகாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் ரித்திகா-வினு தங்களது மகள் நிலாவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை ரித்திகாவே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.