திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?
பாக்கியலட்சுமி சீரியல்
விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார்.
அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.

புதிய தொடர்
இவர் ஜீ தமிழில் மிர்ச்சி செந்தில் நடிக்க புதியதாக உருவாகிவரும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட்டாகி இருந்தார். தொடருக்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.
ஆனால் தற்போது இன்னும் ஒளிபரப்பப்படாத அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் ரித்திகா, அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை, இவரும் ஏன் விலகினார் என்பது பற்றியும் தகவல் இல்லை.

முந்தானை முடிச்சு படத்தில் கிளாமராக நடித்த டீச்சரா இது?- பேரன் குழந்தைகளுடன் அவரின் குடும்ப போட்டோ
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu