சினிமாவில் அறிமுகமாகும் ரோஜாவின் மகள் ! - உண்மையை போட்டுடைத்த அவரின் அப்பா?
ரோஜாவின் மகள்
திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகள் ரோஜா மற்றும் ஆர்.கே செல்வமணி, அவர்களின் மகள் அன்ஷுமாலிகா கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் பரவின.
மேலும் அன்ஷுமாலிகா நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது அன்ஷுமாலிகாவின் தந்தை இயக்குநர் ஆர்.கே செல்வமணி இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார். “சிறுவயதிலிருந்தே பெரிய படிப்பாளி 500 விருதுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியுள்ளார்.
அவரின் ஆசை
ப்ளஸ் டூ முடித்துவிட்டு அன்ஷுமாலிகா மேற்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்றதையும் நிறைவேற்றி வைத்தோம். தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க, அமெரிக்கா போயிருக்கா. இன்னும் நாலு வருஷம் அமெரிக்காலதான் இருப்பாள்.
அதனால் படத்துல நடிக்கப்போறா, இந்த ஹீரோவுக்கு ஹீரோயினா அறிமுகமாகப்போறா என்பதெல்லாமே வதந்திதான். எந்த செய்தியிலும் உண்மையே இல்லை” என தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு.. தவறாக பேசும் ரசிகர்கள்